ஆட்டோமொபைல்
இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்

பி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் கொண்ட இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-02-07 06:47 GMT   |   Update On 2020-02-07 06:47 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட இக்னிஸ் காரை அறிமுகம் செய்தது.



மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்தது. புதிய இக்னிஸ் காரில் பி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கே12 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பி.எஸ்.4 என்ஜினும் இதே அளவு செயல்திறனையே வழங்குகிறது.



இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. வடிவமைப்பை பொருத்தவரை புதிய காரில் முன்புறம் மற்றும் பின்புறங்களில் புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஃபாக்ஸ் மற்றும் ஸ்கஃப் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்- லூசென்ட் ஆரஞ்சு, டர்கூஸ் புளூ என இறண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. உள்புறம்: நெக்சா புளூ மற்றும் பிளாக், லூசென்ட் ஆரஞ்சு மற்றும் பிளாக், நெக்சா புளூ மற்றும் சிலவர் என மூன்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News