ஆட்டோமொபைல்
ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் கார்

ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் கார் அறிமுகம்

Published On 2020-02-04 10:06 GMT   |   Update On 2020-02-04 10:06 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐ.என். கான்செப்ட் எஸ்.யு.வி. கார் அறிமுகம் செய்யப்பட்டது.



ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஷன் ஐ.என். கான்செப்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவுக்கான MQB A0-IN பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முதல் வாகனமாக புதிய ஸ்கோடா விஷன் எஸ்.யு.வி. இருக்கிறது.

இந்தியாவில் ஸ்டோகா விஷன் ஐ.என். கார் 2021 ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார் 150 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க், 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புதிய ஸ்கோடா விஷன் ஐ.என். மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 195 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 



ஸ்கோடா விஷன் ஐ.என். 4256 எம்.எம். அளவில் நீளம், 2671 எம்.எம். வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி.யின் ரக்கட் தோற்றம் கொண்டிருக்கிறது. அந்த வகையில் காரின் முன்புறம் மெல்லிய ஹெட்லேம்ப்கள், பிரமாண்ட கிரில், 19 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.

எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில் லேம்ப்கள் க்ரிஸ்டலைன் கொண்டிருப்பது ஸ்கோடா பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் இருக்கிறது. இதன் உள்புற இருக்கைகள் பினாடெக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பயனற்ற அன்னாசி பழ இலைகளும், உண்மையான லெதருக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஃபைபர் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News