ஆட்டோமொபைல்
ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் பி.எஸ்.6 இந்தியாவில் வெளியானது

Published On 2020-01-31 08:17 GMT   |   Update On 2020-01-31 08:17 GMT
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் பி.எஸ்.6 செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஹோண்டா அமேஸ் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பி.எஸ்.6 அமேஸ் விலை ரூ. 6.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் விற்பனையாகும் பி.எஸ்.4 மாடல்களை விட பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 9000 மற்றும் ரூ. 17000 வரையிலும் ரூ. 27,000 மற்றும் ரூ. 51,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமேஸ் பி.எஸ்.6 பெட்ரோல் மாடல்களில் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 90 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 110 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.



புதிய ஹோண்டா பி.எஸ்.6 டீசல் மாடலில்: 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. 

மெக்கானிக்கல் அம்சங்கள் தவிர புதிய காரில் ஹோண்டா எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை. ஹோண்டா அமேஸ் பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 6.10 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News