ஆட்டோமொபைல்
டாடா நெக்சான் இ.வி.

இந்தியாவில் டாடா நெக்சான் இ.வி. அறிமுகம்

Published On 2020-01-29 09:35 GMT   |   Update On 2020-01-29 09:35 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நெக்சான் இ.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் நெக்சான் இ.வி. காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் நெக்சான் இ.வி. கார் துவக்க விலை ரூ. 13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெக்சான் இ.வி. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டாடா நெக்சான் இ.வி.: எக்ஸ்.எம்., எக்ஸ்.இசட். பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட். பிளஸ் லக்ஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் பல்வேறு அம்சங்கள் மற்றும் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய நெக்சான் இ.வி. கார் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஐ.சி.இ. சார்ந்த எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நெக்சான் இ.வி. காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னணி நகரங்களில் முன்பதிவுகள் ஆன்லைன் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையகங்களில் மேற்கொள்ள முடியும். 



டாடா நெக்சான் மாடலில் 95kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது 129 பி.ஹெச்.பி. பவர், 245 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. நெக்சான் இ.வி. காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. 

நாட்டின் முன்னணி நகரங்களில் நெக்சான் இ.வி. காரை சார்ஜ் செய்யும் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை டாடா மோட்டார்ஸ் விரைவில் கட்டமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த காரை ஹோம் சார்ஜர் மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது 60 நிமிடங்களில் பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

டாடா நெக்சான் இ.வி. கார்: சிக்னேச்சர் டியல் புளூ, கிளேசியர் வைட் மற்றும் மூன்லைட் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News