ஆட்டோமொபைல்
டாடா அல்ட்ரோஸ்

இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் வெளியீடு

Published On 2020-01-24 07:24 GMT   |   Update On 2020-01-24 07:24 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.



டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, டிசம்பர் 27-ம் தேதி முதல் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா தளத்தில் உருவாகி இருக்கும் முதல் வாகனமாக அல்ட்ரோஸ் கார் இருக்கிறது. மேலும் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2. வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. 

புதிய அல்ட்ரோஸ் காரில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏழு இன்ச் அளவில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டிருக்கிறது.



டாடா அல்ட்ரோஸ் கார்: 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் முறையே 82 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் மற்றும் 90 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்த காருக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாதுகாப்பிற்கென புதிய காரில் ஏ.பி.எஸ்., இ.பி.டி., கார்னெர் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், முன்புறம் இரண்டு ஏர்பேக், பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், க்ரூயிஸ் கண்ட்ரோல், ஹை ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ்: எக்ஸ்.இ., எக்ஸ்.எம்., எக்ஸ்.டி. எக்ஸ்.இசட் மற்றும் எக்ஸ்.இசட். (ஒ) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News