ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி செலரியோ

இந்தியாவில் மாருதி சுசுகி செலரியோ பி.எஸ்.6 அறிமுகம்

Published On 2020-01-22 15:23 GMT   |   Update On 2020-01-22 15:23 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ பி.எஸ்.6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ்.6 செலரியோ கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய பி.எஸ்.6 மாடல் துவக்க விலை ரூ. 4.41 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.67 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய பி.எஸ்.6 காரின் வெளிப்புற வடிவமைப்பு மற்றும் உள்புறங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரில் முந்தைய மாடல்களில் உள்ளதை போன்றே மெஷ் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் ஹெட்லேம்ப் வரை நீள்கிறது. இத்துடன் கூர்மையான பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி செலரியோ ஹேட்ச்பேக் மாடலில் கார் நிறத்துடன் ஒற்றுப் போகும் டோர் ஹேண்டிள் மற்றும் பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் ORVM-கள் இன்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் அலாய் வீல், எலெக்டிரானிக் பவர் ஸ்டீரிங், பின்புறம் 60:40 விகிதத்தில் இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளன.



இதுதவிர ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி மற்றும் ஓட்டுனருக்கு ஆட்டோ டவுன் பவர் விண்டோ வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏர்பேக், ஏ.பி.எஸ்., சீட் பெல்ட் ரிமைண்டர், சைல்டு ப்ரூஃப் பின்புற லாக், ஸ்டாப் லேம்ப்கள் உயரமாக பொருத்தப்பட்டுள்ளன.

மாருதி செலரியோ மாடலில் 998சிசி, மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் பி.எஸ். விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News