ஆட்டோமொபைல்
எம்.ஜி. இசட்.எஸ்.

எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி

Published On 2020-01-17 09:26 GMT   |   Update On 2020-01-17 09:26 GMT
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது இசட்.எஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் ஜனவரி 27-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் எம்.ஜி. மோட்டார் விற்பனையகம் சென்று ரூ. 50,000 கட்டணத்தில் புதிய எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்ய முடியும்.

எம்.ஜி. இசட்.எஸ். இந்திய சந்தையில் எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது மாடல் ஆகும். முன்னதாக அந்நிறுவனத்தின் ஹெக்டார் கார் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் அறிமுகமானதும் எம்.ஜி. இசட்.எஸ். கார்: ஐதராபாத், ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் மட்டுமே கிடைக்கும்.



எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் புதிய காரில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹீட்டெட் முன்புற இருக்கைகள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஃபோர்டம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் 50 கிலோவாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தினை குர்கிராமில் துவங்கியது. 
Tags:    

Similar News