ஆட்டோமொபைல்
ஜீப் காம்பஸ்

காம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-01-16 09:30 GMT   |   Update On 2020-01-16 09:30 GMT
ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் எஸ்.யு.வி. காரின் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் துவக்க விலை ரூ. 21.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய டீசல் ஆட்டோமேடிக் பவர்டிரெயின் லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் பிளஸ் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. டாப் எண்ட் லிமிட்டெட் பிளஸ் வேரியண்ட் டீசல் ஆட்டோமேடிக் விலை ரூ. 24.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



புதிய 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் ஜீப் காம்பஸ் காரின் இரண்டு வேரியண்ட்களிலும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் கொண்டிருக்கிறது. தற்சமயம் ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேடிக் பவர்டிரெயின் காம்பஸ் டிரெயில்ஹாக் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.  

இந்தியாவில் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 26.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் பிளஸ் வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ள புதிய பவர்டெரியன் ஏற்கனவே டிரெயில்ஹாக் மாடல்களில் உள்ள பவர்டிரெயின் போன்றதாகும். இதில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 173 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News