ஆட்டோமொபைல்
ஹாவல் ஹெச்6

விரைவில் இந்தியா வரும் ஹாவல் பிராண்ட்

Published On 2020-01-11 08:27 GMT   |   Update On 2020-01-11 08:27 GMT
கார் தயாரிப்பில் பிரபல நிறுவனமாக அறியப்படும் கிரேட் வால் மோட்டார்ஸ் விரைவில் இந்திய சந்தையில் ஹாவல் பிராண்ட் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.



கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீனாவைச் சேர்ந்த கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாவல் பிராண்டு கார்கள் இந்தியாவில் அறிமுகமாகிறது.

ஏற்கனவே சீனாவின் எம்.ஜி. மோட்டார்ஸ் பெருமளவு வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த சீன நிறுவனமும் இந்தியாவில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. எஸ்.யு.வி. மாடல் கார்கள் தயாரிப்பில் சீனாவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக கிரேட் வால் மோட்டார்ஸ் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் பிரபல எஸ்.யு.வி. மாடலான ஹெச்4, ஹெச்6 மற்றும் ஹெச்9 மாடல் கார்கள் அனைத்தும் பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெற உள்ளது. இது தவிர இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான வேய் மோட்டார்ஸ் உருவாக்கியுள்ள பேட்டரி கார்களும் கண்காட்சியில் இடம்பெறும்.



இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஹாவல் ஹெச்4 மாடலானது மிகவும் கூர்மையான முன்பகுதியைக் கொண்டது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஹூண்டாய் கிரெடா மாடலைக் காட்டிலும் இது பெரியதாகும். 

இதன் பக்கவாட்டு தோற்றம் பார்ப்பதற்கு ஜீப் கம்பாஸை போன்றிருக்கும். இது 4.4 மீட்டர் நீளம் உடையது. 2,660 மி.மீ. சக்கரங்களை உடையது. இது 170 ஹெச்.பி. திறன் மற்றும் 1.5 டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் டியூயல் கிளட்ச் மற்றும் ஏ.எம்.டி. வசதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News