ஆட்டோமொபைல்
ஃபார்ச்சூனர்

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா பி.எஸ்.6 மற்றும் ஃபார்ச்சூனர் பி.எஸ். 6 முன்பதிவுகள் துவக்கம்?

Published On 2020-01-03 10:16 GMT   |   Update On 2020-01-03 10:16 GMT
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா பி.எஸ். 6 மற்றும் ஃபார்ச்சூனர் பி.எஸ். 6 கார்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா பி.எஸ்.6 மற்றும் ஃபார்ச்சூனர் பி.எஸ்.6 மாடல்களுக்கான முன்பதிவு ஜனவரி 6-ம் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்க இருக்கிறது. எனினும், இரு கார்களுக்கான முன்பதிவுகளை விற்பனையாளர்கள் ஏற்கனவே துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி புதிய கார்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூனேவை சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் இரு கார்களுக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்.



புதிய கார்களுக்கான விநியோகம் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ துவங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுக்க பி.எஸ்.6 ரக எரிபொருள் கிடைப்பதற்காக டொயோட்டா நிறுவனம் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா மாடல்களின் பி.எஸ்.4 வெர்ஷன்களை விற்பனையாளர்கள் ஏற்கனவே விற்றுவிட்டதாக தெரிகிறது. இரு கார்களும் அதிகம் விற்பனையாகும் மாடல்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இரு கார்கள் மட்டுமின்றி யாரிஸ் பி.எஸ்.6 மாடலுக்கான முன்பதிவுகளை விற்பனையாளர்கள் துவங்கிவிட்டனர்.

இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் கார்களாக இருக்கின்றன. ஏப்ரல் 2020 முதல் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News