ஆட்டோமொபைல்
எம்.ஜி. ஹெக்டார்

இந்திய விற்பனையில் சரிவை சந்திக்கும் எம்.ஜி. ஹெக்டார்

Published On 2020-01-02 09:58 GMT   |   Update On 2020-01-02 09:58 GMT
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஹெக்டார் கார் விற்பனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவை சந்தித்துள்ளது.



எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் டிசம்பர் 2019 மாத்திற்கான வாகன விற்பனை விவரம் வெளியாகியுள்ளது. அதில் எம்.ஜி. ஹெக்டார் கார் மொத்தம் 3,021 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றது. இந்தியாவில் ஜூலை 2019-ல் வெளியான ஹெக்டார் கார் இதுவரை 15,930 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

நவம்பர் மற்றும் அக்டோபர் 2019-ல் முறையே 3239 மற்றும் 3536 ஹெக்டார் கார்களை எம்.ஜி. மோட்டார் விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் முதல் காராக ஹெக்டார் இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமானதும் அமோக வெற்றி பெற்ற ஹெக்டார் கார் துவக்க கால விற்பனையில் அசத்தியது.



இதைத் தொடர்ந்து எம்.ஜி. மோட்டார் இந்தியா ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலின் உற்பத்தியை உயர்த்துவதாக அறிவித்தது. தற்சமயம் ஹெக்டார் காரை முன்பதிவு செய்தால், மூன்று மாதங்களுக்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. 

இந்தியா முழுக்க எம்.ஜி. மோட்டார் நிறுவனம் மொத்தம் 150 மைங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 250 வரை படிப்படியாக உயர்த்த எம்.ஜி. மோட்டார் திட்டமிட்டுள்ளது.

விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமின்றி எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இசட்.எஸ். இ.வி. காரை இந்திய சந்தையில் வெளியிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News