ஆட்டோமொபைல்
ரெனால்ட் டிரைபர்

ரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டு விவரம்

Published On 2019-12-31 09:17 GMT   |   Update On 2019-12-31 09:17 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்ட் இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என ரெனால்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் தெரிவித்தார்.

ஸ்போர்ட் தோற்றம் கொண்ட ரெனால்ட் டிரைபர் காரில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட இருக்கிறது. 1.0 லிட்டர் டி.சி.இ டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் 99 பி.ஹெச்.பி. பவர், 160 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.

இந்தியாவில் இந்த என்ஜின் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய டிரைபர் ஸ்போர்ட் மாடலின் விலை தற்சமயம் விற்பனையாகும் வேரியண்ட்டை விட ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



தற்சமயம் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் டிரைபர் மாடலில் 1.0 லிட்டர் எஸ்.சி.இ. பி.எஸ்.4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 72 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் பி.எஸ். 6 அப்டேட் வழங்கும் பணிகளில் ரெனால்ட் ஈடுபட்டுள்ளது. 

இந்த என்ஜின் விரைவில் 5-ஸ்பீடு ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்பட இருக்கிறது. பி.எஸ். 6 அப்டேட் பெறும் பட்சத்தில் ரெனால்ட் டிரைபர் காரின் விலை உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News