ஆட்டோமொபைல்
கியா ஆப்டிமா

சொகுசு செடான் காரை களமிறக்கும் கியா மோட்டார்ஸ்

Published On 2019-12-25 10:22 GMT   |   Update On 2019-12-25 10:22 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய செடான் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை கியா ஆப்டிமா செடான் காரை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘கே5’ என பெயர் சூட்டியுள்ளது. சொகுசு மாடல் கார்களுக்குரிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் முன்பகுதி திமிங்கலத்தின் மூக்கு முனை போன்று உள்ளது. முன்புற கிரில் புலியின் முகம் போன்று உள்ளது. இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கும்போது காருக்கு கம்பீரமான தோற்றம் கிடைக்கிறது. 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. 10.5 இன்ச் தொடுதிரை மற்றும் 8 இன்ச் ஹெட் அப் டிஸ்பிளே ஆகியன உள்ளன. 

போதிய அளவு வெளிச்சம், வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி மற்றும் 12 போஸ் ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளது. இந்த கார் டர்போ சார்ஜ்டு என்ஜினைக் கொண்டுள்ளது. 1.6 லிட்டர் முதல் 2.5 லிட்டர் வரை திறன் கொண்டதாக என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 2.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு என்ஜின் 286 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். 



8 ஸ்பீடு டியூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியோடு வந்துள்ளது. அனைத்து சக்கர சுழற்சி கொண்ட மாடலும் சில வேரியன்ட்களில் கிடைக்கின்றன. புத்தாண்டில் அறிமுகமாக உள்ள இந்த காரில் ஹைபிரிட் மாடலை அறிமுகம் செய்யவும் கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்புக்கு வசதியாக இதில் 9 ஏர்பேக்குகள் உள்ளன. மேம்பட்ட டிரைவர் உதவி (ஏ.டி.ஏ.எஸ்.) மற்றும் ரிமோட் மூலம் பார்க் செய்யும் (ஆர்.எஸ்.பி.ஏ.) வசதி கொண்டது. இதன் மூலம் வெளியிலிருந்தபடியே காரை பார்க் செய்யவும், பார்க் செய்த இடத்திலிருந்து கொண்டு வரவும் முடியும். 

இந்த காரை ஸ்டார்ட் செய்து 6.6 விநாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை தொட்டுவிடமுடியும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இந்த காரை செயல்படுத்தும் வசதி உள்ளது. டெல்லியில் புத்தாண்டில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்படுகிறது.
Tags:    

Similar News