ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கோனா

இமய மலை சிகரத்தை எட்டும் முதல் எலெக்ட்ரிக் கார்

Published On 2019-12-17 10:11 GMT   |   Update On 2019-12-17 10:11 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் இமய மலை சிகரத்தை எட்டும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்ற பெருமையை பெறுகிறது.



ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் இமய மலை சிகரத்தை எட்டும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்ற பெருமையை பெறுகிறது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 23.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹூன்டாய் கோனா இ.வி. காரில் 39.2 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ARAI சான்றுடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.



கோனா இ.வி. மாடலில் உள்ள பேட்டரியை 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய 52 நிமிடங்களே போதும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது. எனினும், வழக்கமான சார்ஜிங் முறைகளில் ஹூன்டா கோனா இ.வி. காரை முழுமையாக சார்ஜ் செய்ய ஒன்பது மணி நேரம் ஆகும்.

ஹூன்டாய் கோனா இ.வி. மாடலில் 100 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 131 பி.ஹெச்.பி. பவர் 395 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.7 நிமிடங்களில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News