ஆட்டோமொபைல்
போர்ஷ் கயென் கூப்

போர்ஷ் கயென் கூப் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-12-14 08:39 GMT   |   Update On 2019-12-14 08:39 GMT
போர்ஷ் நிறுவனத்தின் கயென் கூப் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



போர்ஷ் நிறுவனம் இந்தியாவில் புதிய கயென் கூப் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய போர்ஷ் கயென் கூப் பேஸ் மாடலின் துவக்க விலை ரூ. 1.31 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.97 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூப் வெர்ஷன் மாடல் போர்ஷ் கயென் எஸ்.யு.வி. வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய கூப் மாடலின் மேல்புறம் சற்று கூர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் புதுவிதமான ரூஃப்லைன் காரின் தோற்றத்தை அப்டேட் செய்ய வைத்துள்ளது.

புதிய போர்ஷ் கூப் மாடல் இந்தியாவில் சி.பி.யு. முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் பார்க்க ஐரோப்பிய வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரில் தற்சமயம் அடாப்டிவ் பின்புற ஸ்பாயிலர், பானரோமிக் சன்ரூஃப் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.



காரின் உள்புறம் பெரிய டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெனட் கிளஸ்டர், டேஷ்போர்டில் பிரீமியம் லெதர் மற்றும் மென்மையான பொருட்கள் பயன்டுத்தப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு ஆடம்பர அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய போர்ஷ் கயென் கூப் மாடல் வி6 மற்றும் வி8 என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது 3.0 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. உயர் ரக மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 542 பி.ஹெச்.பி. பவர், 770 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் ஸ்டான்டர்டு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News