ஆட்டோமொபைல்
டாடா அல்ட்ரோஸ்

டாடா அல்ட்ரோஸ் இந்திய வெளியீட்டு தேதி

Published On 2019-12-13 10:52 GMT   |   Update On 2019-12-13 10:52 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையின் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் கார் இருக்கிறது. இந்தியாவில் அல்ட்ரோஸ் கார் டாடா நிறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் காராக அறிமுகமாகிறது. இந்த கார் இந்தியாவில் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.



டாடா அல்ட்ரோஸ் காரில் பல்வேறு புதிய அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த என்ஜன் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இந்த கார் ALFA தளத்தில் உருவாகி இருக்கிறது. 

டாடா ஹேரியர் மாடலை தொடர்ந்து இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டாடா அல்ட்ரோஸ் கான்செப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் விழாவில் ஹேரியர் மற்றும் இதர வாகனங்களுடன் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியது.
Tags:    

Similar News