ஆட்டோமொபைல்
ஜாகுவார் லேண்ட் ரோவர்

ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை 3.4 சதவீதம் சரிவு

Published On 2019-12-11 10:04 GMT   |   Update On 2019-12-11 10:04 GMT
சர்வதேச சந்தையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் விற்பனை, நவம்பர் மாதத்தில் 3.4 சதவீதம் சரிவடைந்துள்ளது.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில், உலக அளவில், 46,542 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை விற்பனை செய்துள்ளது. 

இது சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.4 சதவீதம் குறைவாகும். இதில் ஜாகுவார் கார்கள் விற்பனை 23 சதவீதம் குறைந்து 11,464-ஆக உள்ளது. லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை 35,078-ஆக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீதம் உயர்வாகும்.



சீனாவில் ஜே.எல்.ஆர். கார்கள் விற்பனை 29 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. வட அமெரிக்காவில் விற்பனை 4.9 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும் இங்கிலாந்தில் 10.8 சதவீதமும், ஐரோப்பாவில் 16.8 சதவீதமும் குறைந்து இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.216 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,048 கோடியாக இருந்தது. அந்த வகையில், இழப்பு கணிசமாக குறைந்துள்ளது.
Tags:    

Similar News