ஆட்டோமொபைல்
2020 ஹோண்டா சிட்டி

ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை சரிவு

Published On 2019-12-03 10:25 GMT   |   Update On 2019-12-03 10:25 GMT
இந்திய சந்தையில் 2019 நவம்பர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 50.34 சதவீதம் சரிந்துள்ளது.



ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 2019 நவம்பர் மாதத்தில் 50.34 சதவீதம் சரிந்துள்ளது. உள்நாட்டில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் மொத்தம் 6,459 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. சென்ற ஆண்டு நவம்பர்  மாதத்துடன் ஒப்பிடும்போது இது 50 சதவீத சரிவாகும். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 13,006 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. 2018-19-ஆம் நிதி ஆண்டில், ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,83,787-ஆக இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது 1,70,026-ஆக இருந்தது.



ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் தற்சமயம் சிட்டி, அமேஸ், ஜாஸ், டபுள்யூ.ஆர்.-வி, சிவிக் மற்றும் சி.ஆர்.-வி போன்ற வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

மாருதி சுசுகி நிறுவன வாகன விற்பனை 3.2 சதவீதம் சரிந்துள்ளது. 2019 நவம்பர் மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 1,41,400 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 2 சதவீதம் உயர்ந்துள்ளது. நவம்பர் 2019-ல் இந்நிறுவனம் மொத்தம் 44,600 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

நவம்பர் 2019-ல் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் மொத்தம் 105 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது நவம்பர் 2018 உடன்  ஒப்பிடும் போது 80.66 சதவீதம் சரிவாகும். நவம்பர் 2018-ல் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் மொத்தம் 534 யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்தது.
Tags:    

Similar News