ஆட்டோமொபைல்
டெஸ்லா சைபர்-டிரக்

அறிமுகமான சில நாட்களில் 1.46 லட்சம் பேர் முன்பதிவு செய்த சைபர்-டிரக்

Published On 2019-11-25 09:19 GMT   |   Update On 2019-11-25 09:19 GMT
டெஸ்லா நிறுவனத்தின் சைபர்-டிரக் அறிமுகமான சில நாட்களில், அதனை வாங்க சுமார் 1.46 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.



டெஸ்லா நிறுவனத்தின் சைர் டிரக் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான சில நாட்களிலேயே இதனை வாங்க 1,46,000 பேர் சைபர்-டிரக் வாகனத்தை வாங்க முன்பதிவு செய்து இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

புதிய டெஸ்லா சைபர்-டிரக் மாடல்களில் 42 சதவிகிதம் பேர் டூயல் மோட்டார் வேரியண்ட்டையும், 17 சதவிகிதம் பேர் ஒற்றை  மோட்டார் வேரியண்ட்டை முன்பதிவு செய்துள்ளனர் என எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

முன்பதிவு துவங்கிய இரண்டு நாட்களில் டெஸ்லா நிறுவனம் சுமார் 1.46 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 104 கோடி) முன்பணம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. டெஸ்லாவின் புதிய சைபர்-டிரக் மொத்கம் மூன்று வெர்ஷன்கள்: 250 மைல், 300 மைல் மற்றும் 500 மைல் செல்லும் திறன்களில் கிடைக்கிறது.

புதிய டெஸ்லா சைபர்-டிரக் ஒற்றை மோட்டார் பின்புற வீல் டிரைவல் மாடல், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் பயணிக்க முடியும். இதில் அதிகபட்சம் 3400 கிலோவை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.5 நொடிகளில் எட்டிவிடும்.



இதன் விலை 39,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,64,524) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் கிடைக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 482 கிலோமீட்டர் வரை செல்லும்.

இதில் அதிகபட்சம் 4500 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிவிடும். இதன் விலை 49,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,82,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது வேரியன்ட் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் வருகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும். இது போர்ஷ் 911 மாடலை விட அதிவேகமானதாகும்.

இந்த வாகனத்தில் அதிகபட்சம் 6350 கிலோ வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். இதன் விலை 69,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 49,53,689) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News