ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா

மூன்று லட்சம் பி.எஸ். 6 வாகனங்களை விற்பனை செய்த மாருதி சுசுகி

Published On 2019-11-22 09:12 GMT   |   Update On 2019-11-22 09:12 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை சுமார் மூன்று லட்சம் பி.எஸ். 6 வாகனங்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.



மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பி.எஸ். 6 கார்களை விற்பனை செய்துள்ளது. 

இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் பி.எஸ். 6 வாகனம் ஏழு மாதங்களுக்கு முன் வெளியானது. அதற்குள் மாருதி சுசுகி நிறுவனம் சுமார் மூன்று லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அக்டோபர் 2019 மாதத்தில் மட்டும் மாருதி நிறுவனம் சுமார் ஒரு லட்சம் பி.எஸ். 6 வாகனங்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது.



ஏப்ரல் 2019  மாதத்தில் மாருதி சுசுகி பலேனோ மற்றும் ஆல்டோ கார்களை பி.எஸ். 6 என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இவை மத்திய அரசு விதித்த காலக்கெடு துவங்க ஒரு வருடம் இருக்கும் போதே சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டன.

தற்சமயம் மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ். 6 வாகனங்கள் பட்டியலில்: ஆல்டா 800, வேகன் ஆர், எஸ் பிரெஸ்ஸோ, ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, எர்டிகா மற்றும் எக்ஸ்.எல். 6 போன்றவை இடம்பெற்றுள்ளன. பி.எஸ். 6 பெட்ரோல் கார்கள் காற்றில் கலக்கும் நைட்ரஜன் ஆக்சைடு அளவுகளை 25 சதவிகிதம் வரை குறைக்கும்.
Tags:    

Similar News