ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி பலேனோ

நான்கு ஆண்டுகளில் 6.5 லட்சம் யூனிட்கள் விற்ற பலேனோ

Published On 2019-11-21 11:08 GMT   |   Update On 2019-11-21 11:08 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ கார் நான்கு ஆண்டுகளில் சுமார் 6.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



மாருதி சுசுகி நிறுவனம் நான்கு ஆண்டுகளில் சுமார் 6.5 லட்சம் பலேனோ கார்களை விற்று இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தயாவில் அக்டோபர் 2015 ஆண்டு அறிமுகமான பலேனோ முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. பின் அடுத்த எட்டு மாதங்களில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையானது.

இரண்டில் இருந்து மூன்று லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய மாருதி சுசுகி ஐந்து மாதங்களில் எட்டியது. அந்த வரிசையில் இந்த ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் ஆறு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்து இருக்கிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் பலேனோ கார் ஆறு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. பின் ஐந்து மாதங்களில் 50,000 யூனிட்கள் விற்பனையானது.



இந்த ஆண்டு துவக்கத்தில் மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ காரை அப்டேட் செய்து பி.எஸ். 6 ரக என்ஜினை வழங்கியது. இது பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் கொண்ட மாருதியின் முதல் காராக அறிமுகமானது.

தற்சமயம் இந்த காரில் 1.2 லிட்டர் டூயல்ஜெட் டூயல் விவிடி பி.எஸ். 6 என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News