ஆட்டோமொபைல்
வேகன் ஆர்

வேகன் ஆர் பி.எஸ். 6 கார் வெளியானது

Published On 2019-11-20 09:37 GMT   |   Update On 2019-11-20 09:37 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் பி.எஸ். 6 கார் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் பி.எஸ். 6 கார் சத்தமில்லாமல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 4.42 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வேகன் ஆர் பி.எஸ்.4 மாடலை விட ரூ. 8000 அதிகம் ஆகும்.

பி.எஸ். 6 மாருதி வேகன் ஆர் 1.0 பார்க்க பி.எஸ். 4 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பி.எஸ். 6 மாடலில் ARAI சான்று பெற்றிருக்கிறது. இதனால் காரின் மைலேஜை லிட்டருக்கு 22.5 கிலோமீட்டரில் இருந்து 21.79 கிலோமீட்டராக குறைந்துள்ளது.



இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ் பிரெஸ்ஸோ மாடலை விட சிறிதளவு அதிகம் ஆகும். மாருதியின் புதிய காரில் 998சிசி, 3 சிலிண்டர் K10B என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 68 ஹெச்.பி. செயல்திறன் வழங்குகிறது.

புதிய காரில் பி.எஸ். 6 தவிர எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மூன்றாம் தலைமுறை வேகன் ஆர் மாடல் முந்தைய கார்களை விட அதிக சக்திவாய்ந்ததாகவும், இடவசதி கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த கார் மொத்தம் 14 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஆறு வெர்ஷன்களில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (மேனுவல் மற்றும் ஆட்டோ ஆப்ஷன்கள்), இரு மாடல்கள் பி.எஸ். 4 சி.என்.ஜி. திறன் கொண்ட என்ஜின் மற்றும் ஆறு வெர்ஷன்கள் பி.எஸ். 6 திறன் கொண்ட 1.2 லிட்டர் K12B பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News