ஆட்டோமொபைல்
ஹூண்டாய் வென்யூ

இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹூண்டாய் கார்

Published On 2019-11-12 09:29 GMT   |   Update On 2019-11-12 09:29 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்திய விற்பனையில் தொடர்ந்து அமோக வரவேற்பு பெற்று வருகிறது.



இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் அதிக பிரபல மாடலாக இருக்கிறது. விற்பனை துவங்கிய சில மாதங்களில் ஹூண்டாய் எஸ்.யு.வி. கார் விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது. 

இந்தியாவில் தொடர்ந்து விற்பனை அதிகரித்து வருவதால் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை பெறுவதற்கான காத்திருப்பு காலம் 15 வாரங்கள் வரை அதிகரித்துள்ளது. இது என்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷனிற்கு ஏற்ப வேறுபடும்.

தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின்படி வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. வென்யூ கார்: 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என மொத்தம் மூன்று ஆப்ஷன்களில் கிடைக்கிறது.



ஹூண்டாய் வென்யூ எஸ் 1.0 டி.சி.டி. மாடலை பெற வாடிக்கையாளர்கள் 15 வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. 1.0 லிட்டர் மாடலை பெற அதிகபட்சம் எட்டு வாரங்களும், டீசல் மாடலை பெற ஆறு வாரங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு மே மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ காரின் விலை ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News