ஆட்டோமொபைல்
மாருதி எஸ் பிரெஸ்ஸோ

விற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ

Published On 2019-11-07 09:30 GMT   |   Update On 2019-11-07 09:30 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய விற்பனையில் அசத்தி வருகிறது. இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம்.



மாருதி சுசுகி நிறுவனம் எஸ் பிரெஸ்ஸோ ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ ஹேட்ச்பேக் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியுச்சர் எஸ் கான்செப்ட்டை தழுவி உருவாகி இருக்கிறது.

முதல் மாத விற்பனையில் மாருதியின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடல் 10,634 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் மாருதி சுசுகியின் பிரபல விட்டாரா பிரெஸ்ஸா மாடலை விட அதிகம் ஆகும்.



மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடல் முதல் மாத விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸாவை முந்தியுள்ளது. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா இருந்தது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் அக்டோபர் மாதத்தில் 10,227 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் டாப் 10 பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றன. 

அந்த வகையில் எஸ் பிரெஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்கள் முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன. 
Tags:    

Similar News