ஆட்டோமொபைல்
ஹோண்டா அமேஸ்

அக்டோபரில் மட்டும் 10,000 கார்களை விற்பனை செய்த ஹோண்டா

Published On 2019-11-03 10:52 GMT   |   Update On 2019-11-03 10:52 GMT
ஹோண்டா இந்தியா நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 10,000-க்கும் அதிக கார்களை விற்பனை செய்திருக்கிறது.

ஹோண்டா இந்தியா நிறுவனம் அக்டோபர் 2019 இல் மட்டும் 10,010 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 4,177 யூனிட்கள் குறைவு ஆகும். அக்டோபர் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 633 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

"ஆட்டோமொபைல் துறையின் மந்த நிலையை பண்டிகை காலம் மாற்றியமைத்துவிட்டது. அதிக தள்ளுபடி மற்றும் பண்டிகை கால சலுகைகள் காரணமாக வாகன விற்பனை அதிகரித்தது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது கடந்த மாத விற்பனை ஹோண்டாவிற்கு சாதகமாக அமைந்தது. இதே நிலை வரும் மாதங்களிலும் துவங்கும் என எதிர்பார்க்கிறோம்" என ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தெரிவித்தார். 


தற்சமயம் ஹோண்டா கார்ஸ் இந்தியா - ப்ரியோ, அமேஸ், ஜாஸ், டபுள்யூ.ஆர்.-வி, சிட்டி, பி.ஆர்.-வி, சிவிக், சி.ஆர்.-வி மற்றும் அக்கார்ட் என மொத்தம் ஒன்பது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் ஹோண்டா ஜாஸ் புதிய வேரியண்ட்டை டோக்கியோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது.

இத்துடன் சர்வதேச சந்தைக்கான ஹோண்டா சிட்டி மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகின. இந்த கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் புதிய செடான் மற்றும் ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்யலாம்.

Tags:    

Similar News