ஆட்டோமொபைல்
பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7

இந்தியாவில் மூன்று மாதங்களில் விற்றுத் தீர்ந்த பி.எம்.டபுள்யூ. கார்

Published On 2019-10-29 09:44 GMT   |   Update On 2019-10-29 09:44 GMT
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 எஸ்.யு.வி. கார் இந்தியாவில் மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.



பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் எக்ஸ்7 கார் இந்தியாவில் வெளியான மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்நிலையில், அடுத்தக் கட்ட மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. இவற்றுக்கான விநியோகம் ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 மாடல்: எக்ஸ்டிரைவ் 30டி டிசைன் பியூர் எக்சலென்ஸ் டீசல், எக்ஸ்டிரைவ் 40ஐ பெட்ரோல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டீசல் வேரியண்ட் மாடல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. பெட்ரோல் வேரியண்ட் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பில் செய்யப்படுகிறது.

பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 எக்ஸ்டிரைவ் 40ஐ மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ. சிக்னேச்சர் எடிஷனில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.



இந்த என்ஜின் 260 பி.ஹெச்.பி. பவர், 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 மாடல்: மினரல் வைட், பைடோனிக் புளு, பிளாக் சஃபையர், டெரா பிரவுன், ஆர்க்டிக் கிரெ பிரிலியன்ட் எஃபெக்ட் மற்றும் கார்பன் பிளாக் என மொத்தம் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. எக்ஸ்டிரைவ் 40ஐ மாடல் மட்டும் ஆல்பைன் வைட், வெர்மாண்ட் பிரான்ஸ் மற்றும் சொஃபிஸ்டோ கிரே பிரிலியன்ட் எஃபெக்ட் போன்ற கூடுதல் நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News