ஆட்டோமொபைல்
2020 மெர்சிடிஸ் பென்ல் ஜி.எல்.இ.

இந்தியாவில் பென்ஸ் ஜி.எல்.இ. முன்பதிவு துவங்கியது

Published On 2019-10-28 09:52 GMT   |   Update On 2019-10-28 09:52 GMT
மெர்சிடிஸ் பென்ல் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.இ. கார் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை ஜி.எல்.இ. எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய எஸ்.யு.வி. மாடலின் விலை பிப்ரவரி 2020 வாக்கில் அறிவிக்கப்படும் என மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.

நான்காம் தலைமுறை ஜி.எல்.இ. மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. எனினும், இதன் வெளிப்புற தோற்றம் முதல் தலைமுறை எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட அதிக நீலமாகவும், வீல்பேஸ் 80 மில்லிமீட்டர் வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

காரின் உள்புறம் இரண்டு 12.3 இன்ச் ஸ்கிரீன்கள், பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற அம்சம் சமீபத்தில் அறிமுகமான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களிலும் வழங்கப்படுகிறது.



இந்தியாவில் புதிய ஜி.எல்.இ. மாடலில் பி.எஸ். 6 ரக டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பேஸ் மாடலான ஜி.எல்.இ. 400டி காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும். இந்த என்ஜின் 330 ஹெச்.பி. @3600-4000 ஆர்.பி.எம். செயல்திறனையும் 700 என்.எம். டார்க் @1200-3000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும்.

இதைத் தொடர்ந்து ஜி.எல்.இ. 300டி மாடலில் 2.0 லிட்டர் இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 245 ஹெச்.பி. @4200 ஆர்.பி.எம். செயல்திறனையும் 500 என்.எம். டார்க் @1600-2400 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும். ஜி.எல்.இ. பெட்ரோல் என்ஜின் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் யூனிட் வழங்கப்படலாம்.

இந்த என்ஜின் 367 ஹெச்.பி. @5500-6100 ஆர்.பி.எம். செயல்திறனையும் 500 என்.எம். டார்க் @1600-4500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும். அனைத்து என்ஜின்களும் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News