ஆட்டோமொபைல்
வேகன் ஆர் எலெக்ட்ரிக்

மாருதி எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்

Published On 2019-10-25 09:44 GMT   |   Update On 2019-10-25 09:44 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் வெளியீடு பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.





மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்யப்படுவதாகவும் இந்தியாவில் இந்த கார் வணிகரிதியில் அடுத்த ஆண்டு வெளியாகாது என தெரிவித்துள்ளது. 2020 ஆண்டு வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அடுத்தக்கட்ட சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி. பார்கவா இதுபற்றி கூறியதாவது,

எலெக்ட்ரிக் வாகன பணிகள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிலையிலேயே இருக்கிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் வரை தொடர்ந்து சோதனை செய்யப்படும். மாருதி சுசுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் வணிக ரீதியில் வெளியிடுவதற்கான நிலையில் இல்லை. 



இருசக்கர வாகனங்களை எலெக்ட்ரிக் மயமாக்க அரசு சலுகைகள் அதிகம் வழங்கப்படுகின்றன. எனினும், பயணிகள் கார்களுக்கு நிலைமை வேறாக இருக்கிறது. இதனாலேயே மாருதி சுசுகி தனது இ.வி. வாகனத்தை வெளியிடுவதில் அமைதி காக்கிறது. எலெக்ட்ரிக் வாகனத்தை தற்சமயம் வணித ரீதியில் வெளியிடும் பட்சத்தில் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. 

மேலும் தற்சமயம் இந்த கார் வெளியானால் அதன் விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான அச்சத்தை மேலும் அதிகப்படுத்தி விடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News