ஆட்டோமொபைல்
லம்போர்கினி ஹரிகேன்

ஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா? விற்பனையில் அசத்தும் லம்போர்கினி

Published On 2019-10-16 09:24 GMT   |   Update On 2019-10-16 09:24 GMT
லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் மாடல் கார் ஐந்து ஆண்டுகளில் கணிசமான விற்பனையை பதிவு செய்துள்ளது.



லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் மாடல் கார் ஐந்து ஆண்டுகளில் 14,022 யூனிட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னதாக கலராடோ மாடல் இத்தனை யூனிட்களை கடக்க பத்து ஆண்டுகள் ஆனது.

ஹரிகேன் கூப் வெர்ஷன் கார் 2014 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின் ஸ்பைடர் மற்றும் ரியர்-வீல்-டிரைவ் வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2018 ஆம் ஆண்டு பெர்ஃபார்மனேட் ஸ்பைடர் மாடல் காரின் செயல்திறன் அளவில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.



2019 ஆம் ஆண்டு புதிய ஹரிகேன் இவோ மாடல் அடுத்த தலைமுறை வி10 என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் லம்போர்கினி மொத்தம் 4553 கார்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 96 சதவிகிதம் அதிகம் ஆகும்.

இதில் ஹரிகேன் மாடல் 1,211 யூனிட்களும், ஹரிகேன் பர்ஃபார்மனேட் மாடலும் அடங்கும். அதன்பின் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹரிகேன் இவோ மாடலுக்கான வினியோகம் ஜூன் மாதத்தில் துவங்கியது. அவென்டெடார் வி12 எஸ்.வி.ஜே. மாடல் 649 யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டன.
Tags:    

Similar News