ஆட்டோமொபைல்
மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ்

மஹிந்திரா பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

Published On 2019-10-10 14:25 IST   |   Update On 2019-10-10 14:25:00 IST
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



மஹிந்திரா நிறுவனத்தின் 2019 பொலிரோ பவர் பிளஸ் தீபாவளி ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2019 மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 7.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய தீபாவளி எடிஷனில் காஸ்மெடிக் அப்டேட்கள், புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. காஸ்மெடிக் மாற்றங்களில் புதிய பொலிரோ காரில் ஸ்பெஷல் டீக்கல்கள், சீட் கவர்கள், கார்பெட் மேட்கள், ஸ்கஃப் பிளேட், ஃபாக் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



இத்துடன் பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் கார் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த காரில் ஏர்பேக், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் யு.வி. மாடலாக மஹிந்திரா பொலிரோ இருக்கிறது. இந்த கார் பல்வேறு வெர்ஷன்கள்: பிக்கப், கேம்ப்பர், மேக்சி டிரக் மற்றும் இம்பீரியோ உள்ளிட்டவற்றில் கிடைக்கிறது. இத்துடன் பொலிரோ கார் பாதுகாப்பு துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.

மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் மாடல் 1.5 லிட்டர் எம்ஹாக் டி70 டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. @3600 ஆர்.பி.எம். மற்றும் 195 என்.எம். @1400-2200 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

Similar News