ஆட்டோமொபைல்
டொயோட்டா கிளான்சா

டொயோட்டா கிளான்சா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்

Published On 2019-10-08 09:34 GMT   |   Update On 2019-10-08 09:34 GMT
டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது கிளான்சா ஹேட்ச்பேக் காரின் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.



டொயோட்டா இந்தியா நிறுவனம் கிளான்சா காரின் புதிய விலை குறைந்த மாடலை அறிமுகம் செய்தது. புதிய டொயோட்டா கிளான்சா ஜி வேரியண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. டொயோட்டா கிளான்சா ஜி மாடல் துவக்க விலை ரூ. 6.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா கிளான்சா ஜி மற்றும் வி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கபப்டுகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. டொயோட்டா கிளான்சா ஜி எம்.டி. வேரியண்ட் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது.



இதன் விலை ரூ. 7.21 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடல் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டம் இல்லாமல் புதிய வேரியண்ட் விலை ரூ. 24,000 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டம் நீக்கப்பட்டது தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில் புதிய காரிலும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, MID டிஸ்ப்ளே, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டில்ட் & டெலிஸ்கோபிக் ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News