ஆட்டோமொபைல்
கியா செல்டோஸ்

இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த கியா செல்டோஸ்

Published On 2019-09-28 09:51 GMT   |   Update On 2019-09-28 09:51 GMT
கியா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த செல்டோஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.



கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி. மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் வாகனம் ஆகும். இந்தியாவில் செல்டோஸ் எஸ்.யு.வி. துவக்க விலை ரூ. 9.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் செல்டோஸ் மாடலை வாங்க இதுவரை சுமார் 40,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்சமயம் செல்டோஸ் காரை வாங்க இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் முதல் எட்டு நாட்களில் 6000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் கிரெட்டா மாடலை பின்னுக்குத் தள்ளி செல்டோஸ் முதலிடம் பிடித்துள்ளது. 

கியா செல்டோஸ் எஸ்.யு.வி. கார்: 115 பி.ஹெச்.பி. மற்றும் 144 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் என்ஜின், 115 பி.ஹெச்.பி. மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் CRDi டீசல் யூனிட் மற்றும் 140 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. டர்போ-பெட்ரோல் என்ஜின் என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

மூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6-ஸ்பீடு ஏ.டி., ஐ.வி.டி. மற்றும் 7-ஸ்பீடு டி.சி.டி. என மூன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது. 
Tags:    

Similar News