ஆட்டோமொபைல்
டாடா டியாகோ

விரைவில் இந்தியா வரும் டியாகோ லிமிட்டெட் எடிஷன்

Published On 2019-09-26 08:28 GMT   |   Update On 2019-09-26 08:28 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ காரின் லிமிட்டெட் எடிஷன் வேரியண்ட்டை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் புதிய லிமிட்டெட் எடிஷன் வேரியண்ட்டை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வேரியண்ட் டாடா டியாகோ விஸ் எடிஷன் என அழைக்கப்பட இருக்கிறது. இந்த கார் வரும் வாரங்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

வெளியீட்டிற்கு முன் புதிய லிமிட்டெட் எடிஷன் காரின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி டாடா டியாகோ விஸ் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. 

டாடா டியாகோ விஸ் ஹேட்ச்பேக் மாடலை சுற்றி ஆரஞ்சு நிற ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முன்புற கிரில், வீல் கவர்கள் மற்றும் ORVMகளில் ஆரஞ்சு நிறம் பூசப்பட்டுள்ளது. புதிய டாடா டியாகோ விஸ் டைட்டானியம் கிரே நிறத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



வெளிப்புறம் மட்டுமின்றி காரின் உள்புறத்திலும் ஆரஞ்சு நிறம் காணப்படலாம் என கூறப்படுகிறது. டாடா டியாகோ விஸ் எடிஷனின் கியர் லீவர், ஏர் வென்ட் மற்றும் சீட்களில் ஆரஞ்சு நிற அக்சென்ட்களை எதிர்பார்க்கலாம். மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என தெரிகிறது.

அந்த வகையில் லிமிட்டெட் எடிஷன் மாலில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.05 லிட்டர் மூன்று சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

இதன் பெட்ரோல் யூனிட் 85 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம் மற்றும் 114 என்.எம். டார்க் @3600 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும். டீசல் என்ஜின் 69 பி.ஹெச்.பி. மற்றும் 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். இதன் பெட்ரோல் என்ஜினில் மட்டும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: Motor Arena
Tags:    

Similar News