ஆட்டோமொபைல்
மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 - கோப்புப்படம்

மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 புது வேரியண்ட்

Published On 2019-09-23 08:13 GMT   |   Update On 2019-09-23 08:13 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் உருவாக்கப்படுகிறது. புதிய வேரியண்ட் ஏழு பேர் பயணிக்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய ஏழு பேர் பயணிக்கக்கூடிய எக்ஸ்.யு.வி.300 விரைவில் இந்திய சாலைகளில் எதிர்பார்க்கலாம்.

புதிய கார் வெளியீட்டிற்கு முன் சோதனை செய்யப்படும் என்பதால், இந்த கார் எப்படி காட்சியளிக்கும் என்பதை விரைவில் அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது. எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் எக்ஸ்.யு.வி.400 என்ற பெயரில் வெளியாகும் என்றும் இது எஸ்2014 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதக தகவல் வெளியாகியுள்ளது.

மஹிந்திராவின் புதிய எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் எக்ஸ்.யு.வி.300 மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. புதிய காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மராசோ எம்.பி.வி. காரிலும் வழங்கப்பட்டது.



டீசல் என்ஜின் எக்ஸ்.யு.வி.300 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். எனினும், இதன் செயல்திறன் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் எக்ஸ்.யு.வி.300 மாடல்: 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் யூனிட் வழங்கப்படுகிறது.

இவை முறையே 115 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் மற்றும் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கின்றன. இத்துடன் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட்டை விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News