ஆட்டோமொபைல்
ஆடி ஏ8.எல்.

மேம்பட்ட அம்சங்களுடன் இந்தியா வரும் ஆடி ஏ8.எல்.

Published On 2019-08-25 09:46 GMT   |   Update On 2019-08-25 09:46 GMT
ஆடி நிறுவனத்தின் ஏ8எல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஆடி நிறுவனம் தனது நான்காம் தலைமுறை ஏ8.எல். செடான் மாடல் காரை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த மாடல் காரை தற்போது அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. 

இதற்கான முன்பதிவுகளை இந்நிறுவனம் தொடங்கி உள்ளது. ஏ8.எல். மாடலின் நீளம் 5,302 மி.மீ., அகலம் 1,945 மி.மீ., உயரம் 1,488 மி.மீ. ஏற்கனவே உள்ள முந்தைய மாடலைக் காட்டிலும் இது 37 மி.மீ. நீளமும், 17 மி.மீ. உயரமும் அதிகம் கொண்டது. இதன் உள்புறம் 10.1 இன்ச் தொடுதிரை கொண்டது. இதன் இருக்கைகளில் மசாஜ் வசதி உண்டு.



இதனால் நீண்ட தூரம்சென்றாலும் களைப்பு ஏற்படாது. மேலும் பின் இருக்கை பயணிகளின் காலுக்கு மசாஜ் செய்யும் மசாஜர் இதில் உள்ளது. இந்த மாடலில் 3 லிட்டர் வி 6 டீசல் மற்றும் என்ஜின் மாடல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

இது டீசல் மாடல் 340 ஹெச்.பி. திறனும் பெட்ரோல் மாடல் 286 ஹெச்.பி. திறனும் கொண்டது. இது முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.1.30 கோடி முதல் ரூ.1.40 கோடி வரை இருக்கும்.
Tags:    

Similar News