ஆட்டோமொபைல்
ஹூன்டாய் வென்யூ

புதிய என்ஜின் ஆப்ஷன் பெறும் ஹூன்டாய் வென்யூ

Published On 2019-08-23 09:40 GMT   |   Update On 2019-08-23 09:40 GMT
ஹூன்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வென்யூ கார் புதிய என்ஜின் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படுகிறது.



ஹூன்டாய் வென்யூ கார் புதிதாக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய என்ஜின் ஆப்ஷன் ஏப்ரல் 2020-க்குள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய டீசல் என்ஜின் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது 1.5 லிட்டர் டர்போ டீசல், மற்றும் 1.5 லிட்டர் என இருவித டியூனிங்கில் வழங்கப்படுகிறது. இதன் டர்போ என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜின் 90 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

1.4 லிட்டர் டீசல் என்ஜின் 1.5 லிட்டர் பி.எஸ்.6 என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்படுகிறது. இதே என்ஜின் ஐ20 மாடலிலும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஹூன்டாய் கிரெட்டா மற்றும் வெர்னா மாடல்களில் உள்ள 1.6 லிட்டர் டீசல் என்ஜினுக்கு மாற்றாக 1.5 லிட்டர் VGT டீசல் என்ஜின் வழங்கப்படும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது.



புதிய ஹூன்டாய் வென்யூ கார் இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் கார் ஆகும். இதில் புளு லின்க் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ஹூன்டாயின் புளு லின்க் கனெக்டிவிட்டியில் 33 அம்சங்கள் வழங்கப்படுகிறது. 

வடிவமைப்பை பொருத்தவரை வென்யூ எஸ்.யு.வி. மாடலில் ஹெக்சாகோனல் முன்புற கிரில், டூயல் ஹெட்லேம்ப் கிளஸ்டர், முன்புறம் மெல்லிய இன்டிகேட்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறம் ஹூன்டாயின் வடிவமைப்பு கிரெட்டா மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் ஸ்குவாரிஷ் எல்.இ.டி. டெயில் டைல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புற பம்ப்பர்களில் ரிஃப்லெக்டர்கள் மற்றும் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News