ஆட்டோமொபைல்

400 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பிரதமர் மோடி

Published On 2017-11-23 11:05 GMT   |   Update On 2017-11-23 11:05 GMT
மத்திய அரசின் எதிர்கால திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு அங்கமாக 400 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய இருக்கிறார்.
புதுடெல்லி:

இந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களையும் மின்சாரத்தில் இயங்க வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனங்களுக்கு 10,000 மின்சார வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு நிறுவனம் ஆர்டர் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி டெல்லியில் ஓலா நிறுவனத்துடன் இணைந்து 400 டாடா நானோ எலெக்ட்ரிக் வாகனங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நானோ எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்து 150 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் என்றும் இந்த மாடல் வெள்ளை நிறம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டாடா நானோ மின்சார காரில் பயன்படுத்தப்பட இருக்கும் தொழில்நுட்பமும் இ.எஸ்.எஸ்.எல். நிறுவனத்திற்கு வழங்கப்பட இருக்கும் டிகோர் எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பமும் ஒன்று தான்.



இந்த எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பம் ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் டாடா மோட்டார்ஸ் பிரிட்டன் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதை விட மற்ற அம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது.

நானோ எலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்பட இருக்கும் பேட்டரிகள் கார் சீட் கீழ் பொருத்தப்படும். முன்னதாக வெளியான தகவல்களில் நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்பட்டது.

விரைவில் நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படலாம் என்றாலும், தற்சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இ.எஸ்.எஸ்.எல். நிறுவனத்திற்கு 10,000 எலெக்ட்ரிக் டிகோர் செடான்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
Tags:    

Similar News