பைக்

எலெக்ட்ரிக் பைக்கில் கிளட்ச் வழங்க காப்புரிமை கோரும் ஜீரோ மோட்டார்சைக்கிள்

Published On 2024-03-08 13:53 GMT   |   Update On 2024-03-08 13:53 GMT
  • பயனர்களின் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் என தெரிகிறது.
  • பயனர்களின் குறையை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்துவதற்கென முற்றிலும் புதிய கிளட்ச் சிஸ்டத்திற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. புதிய கிளட்ச் சிஸ்டம் பயனர்களின் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் என தெரிகிறது.

வழக்கமாக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களில் கிளட்ச் வங்கப்படுவதில்லை. மோட்டார்சைக்கிள் தோற்றத்தில் இருந்த போதிலும், பயனர்களுக்கு முழுமையான பைக் ஓட்டும் அனுபவத்தை வழங்காமல் உள்ளது. புதிய சிஸ்டம் பயன்பாட்டிற்கு வரும் போது, பயனர்களின் குறையை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 

Source: Bikewale


காப்புரிமையின் படி புதிய கிளட்ச் சிஸ்டம் வழக்கமான கிளட்ச் போன்றே இயங்குகிறது. புதிய கிளட்ச் சிஸ்டம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டார்க் மற்றும் குறைந்த வேகத்தில் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங்-ஐ கட்டுப்படுத்த உதவுகிறது.

கிளட்ச் லீவரை விடுவித்ததும், மோட்டாரில் இருந்து அதிகப்பட்ச திறனை வெளிப்படுத்த உதவுகிறது. இது வழக்கமான மோட்டார்சைக்கிளில் உள்ளதை போன்றே இயங்குவதால், பெட்ரோல் பைக் அனுபவத்தை அப்படியே கொடுக்கும் என்று தெரிகிறது.

 

Source: Bikewale


புதிய கிளட்ச் சிஸ்டத்தை பெறும் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலாக ஜீரோ SR/F என கூறப்படுகிறது. ஜீரோ நிறுவனத்தின் SR/F, SR/S ஸ்போர்ட்ஸ் டூரர் மற்றும் DSR/X எலெக்ட்ரிக் அட்வென்ச்சர் டூரர் மாடல்களிடையே ஒற்றுமைகள் உள்ள நிலையில், இவற்றிலும் புதிய கிளட்ச் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News