பைக்

விற்பனையில் அசத்தும் டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக்

Published On 2023-01-21 08:08 GMT   |   Update On 2023-01-21 08:08 GMT
  • டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்திய சந்தை விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் ஸ்கூட்டர் 140 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது மேம்பட்ட ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இது டிவிஎஸ் நிறுவனத்தின் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே பலரும் விரும்பும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஐகியூப் இருந்து வருகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் போது டிவிஎஸ் நிறுவனம் அதன் விற்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனினும், நாடு முழுக்க தனது விற்பனை மையங்கள் மூலம் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது டிவிஎஸ் ஐகியூப் மாடல்- ஐகியூப், ஐகியூப் S மற்றும் ஐகியூப் ST என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் முதல் இரு வேரியண்ட்களில் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐகியூப் ST டாப் எண்ட் மாடலில் பெரிய பேட்டரி பேக் உள்ளது. இது 140 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

டிவிஎஸ் ஐகியூப் ST மாடலில் டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், TPMS மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளது. அடுத்த சில மாதங்ளில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஐகியூப் விற்பனையை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News