பைக்

இந்தியாவில் அறிமுகமான டிரைடன்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் மாடல் - விலை, அம்சங்கள் என்னென்ன?

Published On 2024-03-28 12:28 GMT   |   Update On 2024-03-28 12:28 GMT
  • டிரைடன்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
  • இந்த பைக்கிலும் 660சிசி, இன்லைன் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

டிரையம்ப் நிறுவனம் தனது டிரைடன்ட் டிரிபில் டிரிபியூட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இது டிரைடன்ட் 660 மாடலின் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும். புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பிரத்யேக பெயின்ட் மற்றும் விசேஷ அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. 1970-க்களில் அதிக வெற்றிகளை பெற்ற ஸ்லிப்பரி சாம் ரேஸ் பைக்கை நினைவு கூறும் வகையில், டிரைடன்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டிரைடன்ட் டிரிபில் டிரிபியூட் மாடல் டிஸ்டின்டிவ் வைட் மற்றும் மெட்டாலிக் புளூ, ஆங்காங்கே ரெட் ஸ்டிரீக் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இத்துடன் 67 எண்ணின் கிராஃபிக் இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த நிறத்திற்கு ஒற்றுப்போகும் நிறத்தில் ஃபிளை ஸ்கிரீன் மற்றும் பெல்லிபேன் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இந்த மாடலை ஸ்டான்டர்டு எடிஷனில் இருந்து வித்தியாசமானதாக மாற்றுகிறது.

 


மெக்கானிக்கல் வகையில், டிரையம்ப் டிரைடன்ட் 660 மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த பைக்கிலும் 660சிசி, இன்லைன் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 81 ஹெச்.பி. பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த பைக்கின் டியுபுலர் ஃபிரேமுடன் ஷோவா யு.எஸ்.டி. ஃபோர்க் மற்றும் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் இரட்டை 310mm டிஸ்க்குகள், பின்புறம் 255mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

டிரைடன்ட் மாடலில் இரண்டு ரைடிங் மோட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல், நேவிகேஷன் வசதி, ஆல்-எல்.இ.டி. லைட்டிங் மற்றும் ஆட்டோ கேன்சலிங் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் டிரைடன்ட் 660 மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 12 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News