பைக்
null

எலெக்ட்ரிக் பைக் மாடலுக்கு ரூ.22000 தள்ளுபடி அறிவிப்பு

Published On 2023-12-30 10:03 GMT   |   Update On 2023-12-30 10:05 GMT
  • பயனர்கள் ரூ. 22 ஆயிரம் தள்ளுபடியில் வாங்கிட முடியும்.
  • இந்த எலெக்ட்ரிக் பைக் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

பூனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர் டார்க் மோட்டார்ஸ். எலெக்ட்ரிக் பைக் மாடல்களை விற்பனை செய்து வரும் டார்க் மோட்டார்ஸ் தனது கிராடோஸ் R எலெக்ட்ரிக் பைக்கிற்கு ரூ. 22 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் கிராடோஸ் R மாடலை பயனர்கள் ரூ. 22 ஆயிரம் தள்ளுபடியில் வாங்கிட முடியும்.

இத்துடன் ரூ. 10 ஆயிரத்து 500 மதிப்புள்ள இலவச சர்வீஸ் வழங்கப்படுகிறது. இதில் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, டேட்டா கட்டணம், சர்வீஸ் கட்டணம், சார்ஜ் பேக் உள்ளிட்டவை அடங்கும். இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும்.

 


இந்திய சந்தையில் டார்க் கிராடோஸ் R மோட்டார்சைக்கிள்- ஸ்டாண்டர்டு மற்றும் அர்பன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 1 லட்சத்து 67 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கிராடோஸ் R மாடலில் 7.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சம் 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதில் 4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

 


இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு 40 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 17 இன்ச் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு இரண்டு புறமும் ஒற்றை டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பல்வேறு ரைடிங் மோட்கள், ரி-ஜெனரேடிவ் பிரேகிங், ரிவர்ஸ் மோட், மொபைல் கனெக்டிவிட்டி, யு.எஸ்.பி. சார்ஜிங், முன்புறம் ஸ்டோரேஜ் பெட்டி, ஜியோஃபென்சிங், ஃபைன்ட் மை வெஹிகில், மோட்டார் வாக் அசிஸ்ட், கிராஷ் அலெர்ட், டிராக் மோட் மற்றும் ஸ்மார்ட் சார்ஜ் அனாலசிஸ் போன்ற வசதிகள் உள்ளன.

Tags:    

Similar News