பைக்

டெஸ்டிங்கில் சிக்கிய ஹீரோ 125சிசி மோட்டார்சைக்கிள்

Published On 2023-06-20 08:54 IST   |   Update On 2023-06-20 08:54:00 IST
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய வாகனங்ளை உருவாக்கி வருகிறது.
  • இந்திய சந்தையின் பிரீமியம் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த ஹீரோ நிறுவனம் முடிவு.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த மாடல் ஹீரோ நிறுவனத்தின் 125சிசி பிரீமியம் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்று தெரிகிறது.

வழக்கமான 125சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் ஒப்பிடும் போது, புதிய மாடல் பட்ச் பாடிவொர்க் கொண்டிருக்கிறது. புதிய மாடல் மூலம் ஹீரோ நிறுவனம் இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவர முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன் பெட்ரோல் டேன்க் அகலமாக காட்சியளிக்கிறது.

 

பெட்ரோல் டேன்க்-ஐ சுற்றிய ஷிரவுட்களும் இந்த மாலில் உள்ளது. இத்துடன் எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், எல்இடி இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ஸ்ப்லிட் சீட் செட்டப், சிங்கில் பீஸ் ஹேன்டில்பார் வழங்கப்படுகிறது.

என்ஜினை பொருத்தவரை புதிய மாடல் 125சிசி யூனிட் பெற்று இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்படுகிறது.

எல்இடி லைட்டிங் தவிர, புதிய மாடலில் முழுமையான டிஜிட்டல் கன்சோல் வழங்கப்படுகிறது. இது மற்ற ஹீரோ மாடல்களில் உள்ள யூனிட்-ஆகவே இருக்கும் என்று தெரிகிறது. ஹீரோ நிறுவனம் சமீபத்தில் தான் எக்ஸ்டிரீம் 160R 4V மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதுதவிர ஹீரோ நிறுவனம் கரிஸ்மா XMR210 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

Photo Courtesy: bikewale

Tags:    

Similar News