பைக்

பொசுக்குனு பைக் விலையை குறைத்த கவாசகி..

Published On 2023-12-11 10:48 GMT   |   Update On 2023-12-11 10:48 GMT
  • கவாசகி W175 மாடலின் புது வேரியண்ட் W175 ஸ்டிரீட் பெயரில் அறிமுகம்.
  • கவாசகி W175 மாடல் புதிய நிறங்களில் கிடைக்கிறது.

கவாசகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய W175 மோட்டார்சைக்கிள் விலை இந்திய சந்தையில் குறைக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் கவாசகி W175 மாடலின் புது வேரியண்ட் W175 ஸ்டிரீட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கவாசகி W175 மாடலின் ஸ்டாண்டர்டு வேரியண்ட் விலை தற்போது ரூ. 25 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது விலை குறைப்பின் படி இந்த மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் என துவங்கி ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் என மாறி இருக்கிறது.

 


விலை குறைப்பு மட்டுமின்றி கவாசகி W175 மாடல் புதிய நிறங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், கவாசகி W175 மெட்டாலிக் ஓசன் புளூ மற்றும் மெட்டாலிக் கிராஃபைட் கிரே என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் ஆகும்.

இந்த இரண்டு நிறங்களும், எபோனி மற்றும் கேன்டி பெர்சிமோன் ரெட் நிறங்களுடன் இணைகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் ஆகும். விலை குறைப்பு தவிர இந்த மாடலின் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையிலானது ஆகும். 

Tags:    

Similar News