பைக்

125சிசியில் இப்படியொரு பைக்கா? யாரும் எதிர்பார்க்காத சம்பவம் செய்த ஹீரோ

Published On 2025-08-23 08:41 IST   |   Update On 2025-08-23 08:41:00 IST
  • ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் 124.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
  • எஞ்சின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 125R சீரிசை புதுப்பித்துள்ளது. இந்தப் புதுப்பிப்புடன், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் ஒற்றை இருக்கை வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பைக்கின் விலை ரூ. 1 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஒற்றை இருக்கை வகை வேரியண்ட் அதன் டாப்-எண்ட் ஸ்பிலிட்-சீட் ABS வேரியண்ட்டை விட ரூ. 2,000 குறைவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஸ்பிலிட்-சீட் IBS மற்றும் ஸ்பிலிட்-சீட் ABS மாடலுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

வெவ்வேறு இருக்கைகள் தவிர, இந்த வேரியண்ட்டில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒற்றை இருக்கை வேரியண்ட் சவாரி செய்பவர் மற்றும் பின்னிருக்கை பயணி இருவருக்கும் சிறந்த சௌகரியத்தை வழங்க வேண்டும்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் 124.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது புதிய ஹீரோ கிளாமர் X 125 பைக்கிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏர்-கூல்டு மோட்டார் 8,250rpm-ல் 11.4bhp-யையும், 6,000rpm-ல் 10.5Nm டார்க் திறனை உற்பத்தி செய்கிறது. இந்த எஞ்சின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 , ஹோண்டா சிபி 125 ஹார்னெட் மற்றும் பஜாஜ் பல்சர் N125 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.

Tags:    

Similar News