பைக்

முற்றிலும் புதிய ஹீரோ Xoom - இந்திய முன்பதிவு துவக்கம்!

Published On 2023-02-03 08:04 GMT   |   Update On 2023-02-03 08:04 GMT
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் Xoom ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
  • புதிய ஹீரோ Xoom ஸ்கூட்டரின் விலை ரூ. 68 ஆயிரத்து 599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த 110சிசி ஸ்கூட்டர் Xoom முன்பதிவை துவங்கி இருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ Xoom வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். புதிய ஹீரோ Xoom மாடல்- LX, VX மற்றும் ZX என மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் LX விலை ரூ. 68 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விலை விவரங்கள்:

ஹீரோ Xoom LX ரூ. 68 ஆயிரத்து 999 என்றும் Xoom VX ரூ. 71 ஆயிரத்து 799 என்றும் ஹீரோ Xoom ZX ரூ. 76 ஆயிரத்து 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் ஹீரோ Xoom 110 மாடல் ஹோண்டா டியோ மற்றும் டிவிஎஸ் ஜூப்பிட்டர் SmartXonnect வேரியண்டிற்கு போட்டியாக அமைகிறது.

முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் ஹீரோ Xoom 110 மாடலில் முன்புறம் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லைட், H வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல், H வடிவ எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இவைதவிர புது ஹீரோ Xoom 110 ஸ்கூட்டர் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், ஒற்றை ரியர் ஷாக், 12 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள அலாய் வீல் டிசைன் விடா V1 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதன் LX வேரியண்ட் டிரம் பிரேக்குகளையும், VX மற்றும் ZX வேரியண்ட்களில் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் பைபிர் கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ Xoom 110 மாடலிலும் 110.9சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.15 பிஎஸ் பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹீரோ i3S தொழில்நுட்பம், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் உள்ளது.

Tags:    

Similar News