பைக்

ஹீரோவின் புதிய 200 சிசி பைக் - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-07-24 16:59 IST   |   Update On 2023-07-24 16:59:00 IST
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய வாகனத்திற்கான டீசர் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது.
  • இந்த வாகனம் முற்றிலும் புதிய கரிஸ்மா XMR 210 மாடல் ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு தயாரான நிலையில், இருக்கும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. அதில் இந்த மோட்டார்சைக்கிள் சிறப்பான தோற்றம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலின் முன்புறம், பக்கவாட்டில் கூர்மையான பேனல்கள், மஸ்குலர் ஃபியூவல் டேன்க் மற்றும் ஸ்ப்லிட்-சீட் ஸ்டைல் சீட் வழங்கப்படுகிறது.

மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் முற்றிலும் புதிய 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த என்ஜின் 25 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்றும் இத்துடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

 

இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்படும் என்று தெரிகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், கரிஸ்மா XMR 210 மாடல் பஜாஜ் பல்சர் F250, சுசுகி ஜிக்சர் SF 250 மற்றும் யமஹா YZF-R15 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது. 

Photo Courtesy: Bikewale

Tags:    

Similar News