பைக்

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2023-01-24 09:57 GMT   |   Update On 2023-01-24 09:57 GMT
  • இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் வெளியாகிறது.
  • ஹோண்டா நிறுவனம் நாடு முழுக்க பேட்டரி மாற்றும் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 2024 மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அடுஷி ஒகாடா தெரிவித்து இருக்கிறார்.

ஹோண்டா ஜப்பான் உடன் இணைந்து எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருவதாக ஒகாடா தெரிவித்து இருக்கிறார். மேலும் முதல் ஸ்கூட்டர் மாடல் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் தயாராகி விடும் என அவர் மேலும் தெரிவித்தார். ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆக்டிவா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதில் பிக்சட் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடல் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும். இதே ஸ்கூட்டரின் அதிக செயல்திறன் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும், இதில் எளிதில் கழற்றி மாட்டிக் கொள்ளும் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஒரே ஆலையில் IC என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்கு ஏற்ற வசதிகளை கொண்டு வர முதலீடுகள் செய்யப்படும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. மேலும் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரியை சந்தைக்கு ஏற்றவாரு மாற்ற முடிவு செய்துள்ளது. இத்துடன் இரண்டாவது மாடலை அறிமுகம் செய்யும் முன் 6 ஆயிரம் கஸ்டமர் டச்பாயிண்ட்களை அமைக்கவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. 

Tags:    

Similar News