பைக்

முற்றிலும் புதிய பல்சர் P150 இந்தியாவில் அறிமுகம் - பஜாஜ் அதிரடி!

Update: 2022-11-23 09:13 GMT
  • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபல இருசக்கர பிராண்டு பல்சர் தொடர்ந்து அதிக விற்பனையை பதிவு செய்து வருகிறது.
  • முற்றிலும் புதிய பல்சர் P150 மோட்டார்சைக்கிள் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பல்சர் P150 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பல்சர் P150 மாடல் சிங்கில் டிஸ்க் மற்றும் ட்வின் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 1 லட்சத்து 67 ஆயிரத்து 755 என துவங்குகிறது. இதன் சிங்கில் டிஸ்க் வேரியண்ட் சிங்கில் பீஸ் சாடில், ஃபிளாட் ஹேண்டில்பார் கொண்டிருக்கிறது.

இதன் ட்வின் டிஸ்க் வெர்ஷன் ஸ்ப்லிட் ஸ்டைல் சாடில், க்ளிப் ஆன் ஹேண்டில்பார் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 757 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய பல்சர் P150 மாடலின் ஸ்டைலிங் பல்சர் N250 மற்றும் N160 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிசைன் அம்சங்களை பொருத்தவரை டிண்ட் செய்யப்பட்ட விண்ட்ஸ்கிரீன், பாடி கலர் ஹெட்லைட் கவுல், பாடி கலர் என்ஜின் கவுல் கொண்டிருக்கிறது. ட்வின் டிஸ்க் வெர்ஷனில் ஸ்ப்லிட் ஸ்டைல் பில்லியன் கிராப் ரெயில் கொண்டிருக்கிறது.

மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 149.68சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.5 ஹெச்பி பவர், 13.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலின் 90 சதவீத டார்க் பயன்படுத்தக்கூடிய RPM-இல் கிடைக்கும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்து இருக்கிறது.

பஜாஜ் பல்சர் P150 இரண்டு வேரியண்ட்களும் - ரேசிங் ரெட், கரீபியன் புளூ, எபோனி பிளாக் ரெட், எபோனி பிளாக் புளூ மற்றும் எபோனி பிளாக் வைட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் முதற்கட்டமாக கொல்கத்தாவில் அறிமுகமாகி இருக்கிறது. வரும் நாட்களில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த மாடல் கிடைக்கும்.

Tags:    

Similar News