செட்டாக் மாடலுக்கு ரூ. 15000 தள்ளுபடி - பஜாஜ் அதிரடி அறிவிப்பு
- இதில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்கூட்டர் 108 கிலோமீட்டர்கள் வரை ரேன்ஜ் வழங்குகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் செட்டாக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் என்று மாறிவிடும். இந்த சலுகை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என இரண்டு மாநிலங்களில் மட்டுமே பொருந்தும். இதன் காரணமாக மற்ற மாநிலங்களில் செட்டாக் ஸ்கூட்டர் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த சலுகை மற்றும் தள்ளுபடி ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் பஜாஜ் நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கியது. தற்போது இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 108 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இந்த வேரியண்ட் தவிர பஜாஜ் நிறுவனம் சற்றே குறைந்த விலையில் புதிய செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.