பைக்

கோப்புப்படம் 

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படியொரு டிசைனா? அசத்தும் ஏத்தர் எனர்ஜி

Published On 2023-11-11 08:06 GMT   |   Update On 2023-11-11 08:06 GMT
  • தருன் மேத்தா புதிய ஸ்கூட்டருக்கான டீசர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
  • ஏத்தர் சீரிஸ் 1 ஸ்கூட்டரில் டிரான்ஸ்லூசென்ட் பேனல்கள் வழங்கப்பட்டு இருந்தன.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சீரிஸ் 2 பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இந்த மாடலில் கண்ணாடி போன்ற தோற்றம் கொண்ட டிரான்ஸ்பேரண்ட் பாடி பேனல்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதே தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஏத்தர் எனர்ஜி தலைமை செயல் அதிகாரி தருன் மேத்தா புதிய ஸ்கூட்டருக்கான டீசர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். முன்னதாக ஏத்தர் சீரிஸ் 1 ஸ்கூட்டரில் டிரான்ஸ்லூசென்ட் பேனல்கள் வழங்கப்பட்டு இருந்தன. இவற்றை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கலெக்டர்ஸ் எடிஷன் என்று அழைத்தது.

தற்போதைய தகவல்களின் படி ஏத்தர் சீரிஸ் 2 மாடலிலும் தற்போதைய 450 மாடலில் உள்ள மோட்டார், ஹார்டுவேர், டிசைன், பேட்டரி மற்றும் அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. ஏத்தர் 450s, ஏத்தர் 450X (2.9 கிலோவாட் ஹவர்), 450X (3.7 கிலோவாட் ஹவர்) மாடல்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

Tags:    

Similar News